உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஐஐடி குவஹாத்தி

உலகளாவிய உயர்கல்வி ஆய்வு அமைப்பான கியு.எஸ் (Quacquarelli Symonds) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், உலக பல்கலைக் கழக தரவரிசைகளின் 2023 பதிப்பில், 54 கல்வித் துறைகளின் ஆய்வுக்கான கல்வியில், உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களை பெயரிட்டுள்ளது. இப்பட்டியலில், அசாமில் உள்ள ஐ.ஐ.டி குவஹாத்தி பெட்ரோலியம் பொறியியலில் சிறப்பாக செயல்பட்டு உலகளவில் 51 முதல் 100வது இடத்தையும், பாரத அளவில் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இக்கல்வி நிறுவனம் இரண்டு கூடுதல் பாடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி குவஹாத்தியைப் பொறுத்தவரை, அதன் ஆறு திட்டங்கள் தரவரிசையில் மேம்பட்டுள்ளன. 2023ம் ஆண்டுக்கான கியு.எஸ் உலக பல்கலைக் கழக தரவரிசையில் ஐ.ஐ.டி குவஹாத்தியின் செயல்திறன் குறித்துப் பேசிய அதன் இயக்குநர் பேராசிரியர் பரமேஸ்வர் கே. ஐயர், “ஐ.ஐ.டி குவஹாத்தி தரமான கல்வியை வழங்க கடுமையாக உழைத்து வருகிறது. இது ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ உடன் இணைந்து, நிறுவனம் பல்துறை பாடங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. இது அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. இந்த நிறுவனம் சிறந்த 100 பாட திட்டங்களைக் கொண்டுள்ளது. சிறந்த 100 திட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உலகின் 21வது வலிமையான உயர்கல்வி முறையின் தாயகமாக பாரதம் உள்ளது. 54 பாட அட்டவணைகள் முழுவதும் தரவரிசைப்படுத்தப்பட்ட திட்டங்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில், உலகில் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட 12வது பிரதேசமாக பாரதம் உள்ளது. பரந்த பாடப் பிரிவுகளில், ஐ.ஐ.டி குவஹாத்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது, அதில் 222 இடத்தில் உள்ளது” என தெரிவித்தார்.