இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் மோடி

குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெறவுள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகிறார். இந்த கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, இயற்கை வேளாண்மை தொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். கிராமம் தோறும் குறைந்தது 75 விவசாயிகள் இயற்கை வேளாண் முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் விடுத்த அழைப்பையடுத்து, சூரத் மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் 75 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.