ஆர்.எஸ்.எஸ். மீது பழி சுமத்திய ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி

காந்திஜி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று பேசிய ராகுல் காந்திக்கு

உச்ச நீதிமன்றம் கண்டனம். மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.

ஆண்டு 1934. மகராஷ்ட்ர மாநிலம் நாகபுரிக்கு அருகில் உள்ள வார்தாவில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடந்து கொண்டிருந்தது. முகாம் நடப்பதை அறிந்து கொண்ட காந்திஜி முகாமிற்கு வருகை தந்தார். அங்கு சாதி பேதமில்லாநிலையைக் கண்டு வியந்து போனார். எனது கனவை நினைவாக்கி வருவது சங்கம்தான் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் புகழாரம் சூட்டியுள்ளார். பிற்காலகட்டத்தில் சில சமயங்களில் சங்க ஸ்வயம்சேவகர்கள் மகாத்மா காந்திஜிக்கு பாதுகாப்பு வழங்கிய நிகழ்ச்சிகளும் உண்டு. அணுகுமுறைகளுக்கு அப்பாற்பட்டு, சிந்தாந்த ரீதியாக சங்கத்திற்கும் காந்திக்கும் அப்படி ஒரு நல்ல உறவு இருந்து வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கும் ஹிந்து இயக்கங்களுக்கும் என்ன வித்தியாசம் – எளிதில் சோல்லிவிடலாம். காந்திஜியின் கருத்துக்களில் சிறுபான்மையினரை தாஜா செதல் என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவை ஹிந்து இயக்கங்கள். ஆனால் காந்தியின் கருத்துக்களில் சிறுபான்மைதாஜா என்ற ஒன்றை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு இதர கருத்துக்களை கடாசிவிட்டுச் செயல்பட்டு வருவது காங்கிரஸ்.rss

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான்” என கடந்த தேர்தலின் ராகுல் காந்தி போது மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பிவண்டியில் ராகுல்காந்தி பேச, அவர் மீது ஆர்.எஸ்.எஸ் அன்பர் ஒருவரால் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் தொடர்ச்சியாக இப்போது உச்ச நீதிமன்றம், தவறான தகவலுக்கு மன்னிப்புக் கேளுங்கள், இல்லையே வழக்கை சந்தியுங்கள்” என்று ராகுலை எச்சரித்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இருந்து, ‘ராகுல் மன்னிப்புக் கேட்கமாட்டார், வழக்கை சந்திப்பார்’ என கூறப்பட்டுள்ளது.

முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் சங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் போது இவர் எப்படி வழக்கை சந்திக்கப் போகிறார்? புதிதாக இவரால் என்ன ஆவணம் கொடுக்க முடியும்? நீதிமன்ற காலதாமதத்தை சாதகமாகக் கொண்டு புதிதாக வேறு வேறு ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தை குழப்ப திட்டமிடுகிறார்களா போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. வரலாறு கூறுவதன் சுருக்கம் இவைதான் :

காந்திஜியின் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோஷலா, தனது தீர்ப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை.

அதுமட்டுமல்ல, வழக்கின் விவரங்களைக் கொண்டு அது தனக்கு ஏற்படுத்திய தாக்கத்தை மையமாகக் கொண்டு பின்னாட்களில் அவர் ஓர் புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி மர்டர் ஆஃப் தி மகாத்மா’. இந்தப் அவர் ஆர்.எஸ்.எஸ்.பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

காந்திஜி கொலையின் எல்லா பரிமாணங்களையும் கண்டறிய நவம்பர் 21, 1966ல் ஒரு நபர் கபூர் கமிஷன் நியமிக்கப்பட்டது.

101 சாட்சிகள்,. 407 பத்திரங்களை, 162 அமர்வுகள், மும்பை, தில்லி, நாக்பூர், பரோடா, புணே உட்பட பலமுக்கிய நகரங்களுக்கு விசாரணை நிமித்தம் பயணம். மகாராஷ்ட்ர மாநில அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ். கொத்வயின் 37 நாள் விவாதம், மற்றொரு வழக்கறிஞர் பி.பி.லாலின்  13 நாள் விவாதம் என கபூர் கமிஷன் செவ்வனே செயல்பட்டது.

செப்டம்பர் 30, 1969ல் தனது பணியை நிறைவு செத  ஒருநபர் கபூர் கமிஷனும் தனது தீர்ப்பில் ஆர்.எஸ்.எஸ்.க்கும் காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதிபட தெரிவித்தது. காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் கபூர் கமிஷன் என்பது நினைவு கூரத்தக்கது. ஏன், அப்போது எங்கும் காங்கிரஸ் ஆட்சிதானே.

காந்திஜின் கொலையையொட்டி சட்டம் ஒழுங்கு காரணமாக, பிப்ரவரி 4, 1948ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செயப்பட்டது. எனினும் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணையின் அடிப்படையில் பலமுறை பிரதமர் நேருவிற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல்.

விசாரணையின் அடிப்படையில் வேறுகாரணங்கள் ஏதும் சோல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ஸின் மீதான் தடை ஜூலை 11, 1949ல் முழுமையாக நீக்கப்பட்டது.

மேற்படி சம்பவங்கள் காந்தி கொலை வழக்கிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன. அதுமட்டுமல்ல, சங்கத்தின் மீது குற்றம்சாட்டி, அதற்குத் தடையும் விதிக்கக் காரணமான பிரதமர் நேரு அவர்களே 1962ல் இந்தியா மீது சீனா தொடுத்த போரில் போர்களத்திலும் இதர இடங்களிலும் தேச சேவையாற்றிய ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவைப்பணியைப்  பாராட்டி 1963ம் ஆண்டு குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 3000ற்கும் அதிகமானோர் சங்க சீருடையிலேயே அந்த ஆண்டு குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இருப்பினும் கூட அரசியல் ரீதியாக காங்கிரஸ்கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. எனவேதான் இந்திரா அம்மையார்  நெருக்கடி நிலை கொண்டுவந்த போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செதார். நெருக்கடி நிலையை முறியடித்த சங்கம் தடையையும் தகர்த்துக் கொண்டு வெளிவந்தது. பின்னாளில் ரஷ்யா சென்ற இந்திரா அம்மையார், இந்தியாவின் மிகப் பெரும் தேசபக்த தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் எனப்  பாராட்டினார்.

ராமஜென்ம பூமி மீட்புப் போராட்டத்தின் போது, அயோத்தியில் சர்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டபோதும் சங்கம் தடை செயப்பட்டது. அத்தடையில் இருந்தும் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது சங்கம்.

ஆக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூன்றுதடைகளைத் தாண்டி – நேரு, இந்திரா, நரசிம்மராவ் என மூன்று முறை காங்கிரஸ் அரசால் தடை செயப்பட்ட போதும், வெற்றிகரமாக தடைகளை தகர்த்து வெளிவந்து சரித்திரம் படைத்துள்ளது.  அதுமட்டுமல்ல, சிந்தாந்த ரீதியில் அதனோடு ஒத்துப்போகும் மத்திய அரசு ஒன்று இன்று ஆட்சிக்கட்டிலில் வலுவான நிலையில் வந்து அமர்ந்து விட்டது. இதைத்தான்  காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகளால் சகிக்கமுடியவில்லை. விளைவுதான் ராகுல் ‘காந்தி’யின் இந்த அபத்தமான குற்றச்சாட்டு. இனி தடைகள் செல்லுபடியாகாது, அவதூறு செயலாம் என்பதே இதன் நோக்கம்.

இதுபோன்ற அவதூறுகளையும்  சங்கம் 1948 தொட்டு தொடர்ந்து சந்தித்தே வருகிறது. ஆர்.எஸ்.எஸ்தான் காந்தியைக் கொன்றது என்று பேசிய மறைந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சீதாராம் கேசரி மீது வழக்கு தொடரப்பட்டு, அவர் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரினார். மறைந்த முன்னாள் ம.பி. முதல்வரும் மத்தியமனிதவள மேம்பாட்டு அமைச்சருமான அர்ஜூன் சிங் இதே குற்றச்சாட்டை முன் வைக்க அவர்மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போதே அவர் இறந்துவிட்டார். ஜனவரி 2000 ல், ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை இதே குற்றச்சாட்டுடன் ஒரு தலையங்கம் எழுதியது. அதற்காக அப்பத்திரிகை மீதும் அதன் அன்றைய ஆசிரியர் ஏ.ஜி, நூரானி உட்பட சிலர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இறுதியில் பிப்ரவரி 25, 2002 ஸ்டேட்ஸ்மெனில் தனது கருத்துக்கு பெரிய மன்னிப்புக் கோரி செதி வெளியிட்டார் ஏ.ஜி, நூரானி.

ஆக வரலாறும் சரி, உண்மையும் சரி ராகுலுக்கு சாதகமாக இல்லை. எனவே மன்னிப்பு கேட்பதைத் தவிர அவருக்கு வேறு வழியும் இல்லை.