பிரச்சினைகளுக்கு தீர்வு, ஹிந்து ஒற்றுமை

திருவாலவாய நல்லூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகிலுள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கோயிலின் பூசாரி மோகன், இவ்வூரில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை பலகாலமாக நீடித்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் கோயில் முன்பு முஸ்லிம்கள் சுவர் எழுப்பி பாதையை மறைத்துதான். இதனால் கருத்துவேறுபாடு, மோதல், சிறை செல்லுதல் போன்றவை ஏற்பட்டது. மேலும் இன்று வரை மாவட்ட, உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது” என்றார்.

பாரதிய கிசான் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, ஹிந்து சமயத்தின் அடிப்படையில் அனைவரும் சமம் என்ற நோக்கில் நாங்கள் முஸ்லிம்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் வைத்தோம். அவர்களும் அழைப்பிதழை ஏற்று கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், பூ, பழங்களுடன் நேரில் வந்து நன்கொடையும் அளித்தனர். மேலும் சில முஸ்லிம்கள் தங்கள் பிரச்சனையை மறந்து விட்டதாக தெரிவித்தனர்.” என்றார். திருவாலவாய் நல்லூர் மணி, அரசாங்கம்மக்களை ஒற்றுமைப்படுத்தும், பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபthiruvalavaya nallurடாததால் ஹிந்து தர்மத்தின் படி நாம் அனைவரும் சமம் என்று நோக்கத்தோடு ஹிந்துக்கள் செய்த முயற்சியே நல்லிணக்கத்திற்கு காரணம்” என்று தெரிவித்தார்.

எம்.கிருஷ்ணன் கூறுகையில், முதற்படியாக கும்பாபிஷேகத்தின் வாயிலாக ஹிந்துக்களை இணைத்தோம். அடுத்தது முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வழக்கினை முடிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் கோயிலின் இதர பணிகளை விரைவில் முடிக்கப்படும்” என்றார்.

பிறகு ஊர் மக்களிடம் கருத்து கேட்டபோது, நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சகோதரர்களாக வாழ விரும்புகிறோம். அதற்கான முதல் முயற்சி கும்பாபிஷேக விழா” என்று பதில் அளித்தனர்.