அஞ்சலகத்தில் புனித கங்கை

உலகிலேயே மிகப்பெரிய தகவல் பரிமாற்ற அமைப்பு எது என்று ஆவு செதால், அது இந்தியாவின் அஞ்சல் துறை மட்டுமே.  மொத்தம் 1,54,882 அஞ்சல் நிலையங்கள் நாடு முழுவதும் இயங்கிவருகின்றன. தனியார் கூரியர்  நிறுவனங்கள் செல்லமுடியாத குக்கிராமங்களில் கூட அஞ்சல் நிலையங்கள் இயங்கிவருகின்றன.  இந்தியாவின் மொத்தமுள்ள  அஞ்சல் நிலையங்களில், 1,39,182 அஞ்சல் நிலையங்கள் ஊரகப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.  நாடு சுதந்தரம் பெற்றபோது இருந்த 22,344 அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி, தற்போது 1,54,882 அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருவது உலகிலேயே எந்த நாட்டிலும் காண முடியாது.

இப்போது பிரச்சினைக்கு வருவோம். அஞ்சல் நிலையங்கள் மூலம் கங்கை நீரை ஏன் விற்கின்றது இந்த அரசு?  ஹிந்துத்துவ கருத்துக்களை அஞ்சல் துறை மூலம் பரப்பும் ஒருவித முயற்சி இது என்று ஒருசாரார் கூறுகின்றனர்.  இதை எதிர்த்து அண்மையில் போராட்டங்களும் வெடித்தன.  காட்சி ஊடகங்களும் பல நாட்கள் இதுகுறித்து ganga-waterசோற்போர் நடத்தின.  அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் தலைகளை விற்காமல், கங்கை நீர் ஏன் விற்கப்படுகிறது?  இது குறித்து விவாதிக்கும்போது, சில தகவல்கள் நம் கண்முன்னே வருகின்றன.

முதல்முறையாக, அஞ்சல் நிலையங்களை, அஞ்சல் துறை சம்பந்தமில்லாமல் பிற துறைகளைச் சார்ந்த பொருட்களை விற்றது 2007ம் வருடத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு.  இவ்வருடம் அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல், அஞ்சல் நிலையங்களில் ரயில்வே துறை மூலம் பயணச்சீட்டு முன்பதிவு வசதி (Passenger Reservation ­System)  செது தரும் வசதி தொடங்கப்பட்டது.  புது டெல்லியில், ரயில் பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவும், அஞ்சல் துறை அமைச்சரும் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஏ. ராஜாவும் இதற்கான வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.  அப்போது சோல்லப்பட்ட காரணம், ‘அஞ்சல் துறை தனது வருவாயை பெருக்கும் வகையிலும், பொது மக்களுக்கு ரயில் சேவை எளிதில் சென்று சேரவும்தான் இந்த புதிய முயற்சி’.  அடுத்த ஆண்டு, அஞ்சல் நிலையங்கள் மூலம் தங்கக் காசுகள் (Gold Coin) விற்பனையும் தொடங்கப்பட்டது. இதை முன்னின்று செயல்படுத்தியது அப்போதைய அஞ்சல் துறை இணை அமைச்சரான காங்கிரசின் ஜ்யோதிராதித்ய சிந்தியா ஆவார்.  காலப்போக்கில் அஞ்சல் நிலையங்களில் சூரிய சக்தி மின்விளக்கு (solar lamp)  விற்கவும் முடிவு செயப்பட்டது.  இந்த முடிவை எடுத்ததும் அதே காங்கிரஸ் ஆட்சி தான்.  2012ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் சூரிய சக்தி மின்விளக்குகள் அஞ்சல் நிலையங்கள் மூலம் விற்கப்பட்டன. அடுத்து வந்தது, மொபைல் போன்களின் விற்பனை.  ரூ.2000 விலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல் போன்கள் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வந்தன. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன மொபைல் போன்களை அஞ்சல் துறை மூலம் விற்க முடிவு செயப்பட்டது.  இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றது.

அஞ்சல் துறையின் பிரதான பணிகள் (Core Business) என்பது அஞ்சல் தலைகளை விற்பனை செவது, தபால்களை  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, யாருக்கு வழங்கப்படவேண்டுமோ அந்த நபரின் கைகளுக்கு தபால்களை வழங்குவது, அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவது ஆகியவை தான்.  ஆனால், காலப்போக்கில் தனது பிரதான பணிகளை தாண்டி, Non&Core Business என்று அழைக்கப்படும் பிற சிறு வணிக விற்பனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது அஞ்சல் துறை.  2007ம் ஆண்டு ரயில்வே பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்பட்டதை அடுத்து,  வீடுகளில் உள்ள தொலைபேசிகளுக்கான மாத பில்களை வசூலிப்பது, தேசிய பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC) தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் விற்பனை செதல், பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை விற்பனை செதல், வட இந்தியர்கள் விரும்பிக் கொண்டாடும் ராக்கித் திருவிழாவிற்காக ராக்கிகளை விற்பனை செதல் போன்ற பிற விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  இதற்கெல்லாம் சோல்லப்பட்ட காரணம், வாடிக்கையாளர்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகாமையில் ஒருமுக விற்பனை நிலையங்களாக (One Stop Solution Provider) இயங்க தகுதி வாந்தவை அஞ்சல் நிலையங்களே என்பதாகும். இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 21.22 சதுர கிலோமீட்டருக்கு ஒரு அஞ்சல் நிலையம் என்ற வகையில், ஒவ்வொரு அஞ்சல் நிலையமும் தான் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் வாழும் 8221 குடிமக்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருவதால்,அதன் பிரதான பணிகளையும் தாண்டி, வர்த்தக ரீதியான அஞ்சல் துறைக்கு சம்பந்தம் இல்லாத பொருட்களையும் விற்பனை செவது என்று முடிவெடுத்ததே முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் என்பது எத்தனை பெருக்குத் தெரியும்?

நமது நாட்டின் ஒவ்வொரு ஹிந்துவும் தனது வீட்டின்யில் முக்கியமான இடத்தில் வைத்து வணங்குவது கங்கை நீர்தான்.  அன்றாடம் தனது பூஜைக்கும் கங்கை நீரை தான் பயன்படுத்துகின்றனர்.  இத்தகைய புனிதம் வாந்த கங்கை நீரை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதில் அஞ்சல் துறை எடுத்திருக்கும் இம்முடிவு வரவேற்கத்தக்கதே. சூரிய சக்தி மின்விளக்குகளை விற்ற அஞ்சல் நிலையங்கள், கங்கை நீரை விற்பனை செவதில் என்ன தவறு இருக்கமுடியும்?  சிறிது சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும்.

இறுதியாக ஒரு சிறு தகவல்.  அஞ்சல் நிலையங்கள் மூலம் சிறு வணிகம் (Retail ­Business) தொடங்கலாம் என்று அறிவுரை கூறிய அஞ்சல்துறையின் உயர் அதிகாரியே கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்தான் என்பதும், 2007ம் ஆண்டே அவருடன் கங்கை நீரை விற்பனை செவது குறித்து ஆலோசிக்கப்பட்டதும், அதற்கு அவர் தனது முழு ஆதரவையும் வழங்க முன்வந்ததும் எத்தனை பேருக்கு தெரியும்?  உண்மை தெரியாமல், தனிப்பட்ட மத துவேஷத்தின்  காரணமாக, மோடி அரசின் முயற்சியை குறை கூறுபவர்கள் சிந்திக்கவேண்டியது அவசியம்.