ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஒருங்கிணைப்புக் கூட்டம், விசாகப்பட்டினம்

போதை மருந்து ஒழிப்பு குறித்து விவாதம் செய்தோம். நாட்டில் நிலவும் போதை மருந்து பழக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதை மருந்தானது, தற்போது நகரங்களை தாண்டி கிராமங்களில் கூட கிடைக்கிறது, பள்ளி மாணவர்களுக்கு கூட எளிதில் கிடைக்கிறது. இதை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது, சமுதாயமும் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
சங்கம் மற்றும் சங்கத்தால் உத்வேகம் பெற்ற அமைப்புகள் இது தொடர்பாக வேலை செய்து வருகின்றன. கல்வி நிறுவனங்கள், காவல்துறை, அரசு இவர்கள் அனைவருடனும் இணைந்து, இந்த போதை மருந்து புழக்கத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
மக்கள் தொகையில் மாற்றம் குறித்து ஆலோசனை செய்தோம். உலகம் முழுவதும் இது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல நாடுகளில் மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ளனர், ஆனால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
உலகிலேயே மிக அதிகமான இளைஞர்கள் பாரதத்தில் தான் தற்போது உள்ளார்கள். ஆனால் அடுத்த 30, 40 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கும் அதே போன்ற ஒரு நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைபேறு விகிதம் குறைந்து வருவது ஒருபுறம் நடக்கிறது. மறுபுறம் நடக்கும் சீரற்ற மக்கட்தொகை பெருக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில், சமுதாய நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினரின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், பிற பிரிவினரின் எண்ணிக்கை மிக குறைவாகவும் இருப்பதால் ஏற்படும் சீரற்ற நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
− சி.ஆர். முகுந்த், அகில பாரத
இணை பொதுச்செயலாளர், ஆர்.எஸ்.எஸ்.

 

Join RSS இணையதளம் மூலமாக சங்கத்தில் சேர 2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 55,423 பேர் பதிவு செய்தனர். 2026-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் இணையதளம் மூலம் சங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 1,23,287 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்.எஸ்.எஸ்-.ஸில் இணைய விருப்பம் தெரிவித்தவர்கள் 24,086 பேர். 2025 ஜூலை மாதம், இந்த எண்ணிக்கை 9,178 ஆக இருந்தது.

இவ்வாறு இணைய விருப்பம் தெரிவித்தவர்களில் 65% மேற்பட்டோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 85% பேர் 40 வயத்துக்கு உட்பட்டவர்கள்.