அரைவேக்காட்டு அரசியல்வாதி

திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான்,’ பாரதத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது. நமது நாட்டின் மண் அதற்கு தகுதியற்றது. அதில் இதற்கான ரயில் தண்டவாளங்கள் அமைக்க முடியாது. இது பொய்யான கனவு’ என நாடாளுமன்றத்தில் ஒரு அரைவேக்காட்டுத்தனமான வாதத்தை முன்வைத்தார். அவரின் இப்பேச்சுக்கு நாடாளுமன்றத்திற்குள் மட்டுமல்ல, பொதுமக்களிடமிருந்தும் வலுவான எதிர்பு எழுந்தது. நுஸ்ரத் ஜஹான் பேச்சை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடுமையாக எதிர்த்தார். ‘நுஸ்ரத் ஜஹான், நமது பாரத விஞ்ஞானிகள், பொறியாளர்களின் திறன்களை கேள்விக்குள்ளாக்கி அவர்களை அவமரியாதை செய்துள்ளார். இந்திய ரயில்வே ஏற்கனவே அரை அதிவேக ரயில்களை நம் மண்ணில் எந்த சிரமமும் இல்லாமல் இயக்குகிறது.  அவரின் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. புல்லட் ரயில் பாதைகள் தரையில் இருக்காது. அவை உயர்த்தப்பட்ட பாலங்களில் பயணிக்கும். புல்லட் ரயில் திட்டப்பணிகள் மாதத்திற்கு 8 கி.மீ என்ற வேகத்தில் நடைபெறுகின்றன. அதனை மாதத்திற்கு 10 கிலோ மீட்டர் என வேகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.  பாரதத்தில் புல்லட் ரயிலை இயக்குவதில் தொழில்நுட்ப சவால்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தால், அதனை நான் விளக்கியிருப்பேன். ஆனால், அவரோ பாரதத்தின் ஒருமைப்பாடு, கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி உள்ளார், இதனை யாரும் ஏற்க முடியாது’ என பதில் அளித்தார்.