அம்னெஸ்டி இந்தியாவுக்கு அபராதம்

பிரிட்டனைச் சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல், பாரதத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு பெறாத பாரத நிறுவனங்களுக்கு, அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மூலம் ஏராளமான நிதியை அனுப்பியது தெரியவந்துள்ளது. இது எப்.சி.ஆர்.ஏவை மீறும் செயல் ஆகும். குறிப்பாக, உள்துறை அமைச்சகம், எப்.சி.ஆர்.ஏ சட்டத்தின்படி அம்னெஸ்டி இந்தியா உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு வழங்கியுள்ள அனுமதியை மீறும் செயல். அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை (பெமா) மீறி நிதி பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்னெஸ்டி இந்தியாவுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான புகாரை விசாரித்த அமலாக்கத் துறை தீர்ப்பாயம், பெமா விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டதால் அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ. 51.72 கோடியும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகார் படேலுக்கு ரூ. 10 கோடியும் அபராதம் விதித்துள்ளது.