சீனா சமீபத்தில் தன் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கூறியுள்ளது, ஆனால் உண்மை அப்படி அல்ல என்பதையே கல எதார்த்தம் காட்டுகிறது. பல புதிய அடுக்குமாடி கட்ட்டங்களைக் கட்டி ஏழை மக்களை வலுக்கட்டாயமாக அங்கு கொண்டு சென்று குடியமர்த்தியுள்ளது. ஆனால் அவர்களுக்கான வாழ்வாதரம் முறையாக அமைத்துத் தரப்படவில்லை. அவர்கள் தாங்கள் வேலை செய்யுமிடங்கள், விவசாய நிலங்களில் இருந்து வெகு தூரமாக கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்த வாழ்விடங்கள் கட்டாயப்படுத்தி பிடுங்கப்பட்டுள்ளன என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தன் கட்டுரையில் தெரிவித்துள்ளது.