ஜாகிர் நாயக் தடை சரியே

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக். தற்போது மலேஷியாவில் தங்கியுள்ள இவர், நமது நாட்டில் இனவாதம், பயங்கரவாதத்தைத் தூண்டுவது, அப்பவி முஸ்லிம் இளைஞர்களை மூளைசலவை செய்வது என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஒசாமா பின்லேடனை ஆதரிக்கும் ஜாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்கொலை குண்டுவெடிப்பை நியாயப்படுத்தியுள்ளார். ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய அரசு சட்டவிரோத நிறுவனமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜாகிர் நாயக்கிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை இமாம் முகமது தவ்ஹிடி வரவேற்றுள்ளார். முஸ்லிம் மக்களின் பெரும் மதிப்புக்குரியவராக திகழும் இமாம் தவ்ஹிடி, வழக்கறிஞர், எழுத்தாளர் என பன்முகதன்மை கொண்டவர். இஉலகம் முழுவதும் அமைதி, சகோதரத்துவம் பரவ படுபடுபவர். ஆனால், இவரின் பேச்சு, எழுத்து, பிடிக்காத பல முஸ்லிம் அடிப்படைவாதிகள் இவரது உயிருக்கு குறிவைத்துள்ளனர். முன்னதாக இவர், அமைதியான முஸ்லிம்கள் மோடியை நேசிக்கிறார்கள். பயங்கரவாதிகள் அவரை நேசிப்பதில்லை, காஷ்மீர் மட்டுமல்ல பாகிஸ்தானும் பாரதத்தின் சொத்து என்று வெளிப்படையாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.