தி.மு.க வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் பொழுது, தான் பனைமரத்தில் இருந்து இளநீர் பறித்து குடித்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது அவரின் விவசாய அறிவையும், அவர் வகிக்கும் பதவிக்கான தகுதியையும் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அதே சமயம், தி.மு.கவில் இதெல்லாம் சகஜமப்பா என நெட்டிசன்களை கிண்டலடிக்கவும் வைத்துள்ளது. காரணம், தமிழக நிதியமைச்சரின் நிதி மேலாண்மை குறித்த அவரது அறிவின் முதிர்ச்சி அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டி அவர் தயாரித்த பட்ஜெட்டும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. முன்னதாக, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது வழங்கப்பட்ட பதநீரை பருகிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், பதநீர் மிகவும் ருசியாக உள்ளதே இதில் சர்க்கரை போட்டு உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.