பாரதத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளதை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது உலகின் அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை. வளர்ந்து வரும் நாடுகளுக்கு மட்டுமின்றி ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகள் விரைவாக தேவை. பாரதத்தில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவனத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம், பாரதத்தில் அமைந்திருப்பது, அந்நாட்டுக்கு கிடைத்த பாக்கியம். இவ்வாண்டு உலக வங்கி, 50 நாடுகளுக்கான நிதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கும். இந்த நிதியினைக் கொண்டு, அந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள முடியும். என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கூறினார்.