உலக வங்கி கணிப்பு

பாரதத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி  மீண்டு வருகிறது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 9.5 சதவிகித வளர்ச்சி காணலாம் என்று கணித்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் சுமார் 10 சதவீதம் வரை பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று கணித்துள்ளனர். இந்நிலையில், அரசின் சலுகைகள், பொருளாதார சீர்திருத்தங்கள், தேவை அதிகரிப்பு, பொது முதலீடுகள் ஊக்குவிப்பு போன்றவற்றால் பாரதத்தின் ஜி.டி.பி 8.3 சதவீதமாக இருக்கும் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹேன்ஸ் டிம்மர் கணித்துள்ளார்.