மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்சார்பு பாரதம் திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்களின் பங்களிப்புத் தேவை. ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும். இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம், சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்தும்’ எனப் பதிவிட்டுள்ளார். இதன்படி அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிகிறது.