தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த 2019ல் 1,017 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். 2020ல், 17 ஆயிரம் பேர் எழுதினர். கடந்த, 2019ல் 44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2020ல் 57.44 சதவீதமாக உயர்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தனரா இல்லை இப்போது அதிகம் சேர்ந்தனரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக, 2006 முதல் 2015 வரையிலான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், அந்த அறிக்கையில், தி.மு.கவைச் சேர்ந்த எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகள் நடத்துகின்றனர். அதில், எத்தனை மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும். சேலம் மாணவர் தனுஷ் இறப்புக்கு தி.மு.கதான் முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என பொய்யாக வாக்குறுதியளித்த தி.மு.க தலைவர்கள் மீது, டி.ஜி.பி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார்.