இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை செய்தவன் 21 வயதான அஹ்மத் அல் அலிவி அலிசா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அவன் AR-15 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளான். அமெரிக்க காவல்துறை இது ஜிஹாதி பயங்கரவாத தாக்குதலா அல்லது தனி மனித தாக்குதலா என விசாரிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் மருமகள் மீனா ஹாரிஸ், ‘இதற்கு வன்முறை எண்னம் கொண்ட ஒரு வெள்ளைக்காரர்தான் காரணம்’ என தன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். உண்மை தெரிந்தவுடன் அந்த டிவிட்டை நீக்கிவிட்டார். மீனா ஹாரிஸின் இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் கமலா ஹாரிஸ் சங்கடத்தில் உள்ளார்.