போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. குஜராத்தில் நடந்த கலவரங்களை இன அழிப்பாக பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் யூதர்களும், பார்சிகளும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  2. முருகனுக்குக் கோயில் கட்டினார் என்பதற்காக முஸ்லிம் ஒருவரை புதுச்சேரியில் அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். எந்த மதமும் வெறுக்கக் கற்றுத் தருவதில்லை என்பதை இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள்?
  3. அன்னை தெரஸா ஏன் தனது தாய்நாடான அல்பேனியாவிலோ, அதற்கு பக்கத்தில் உள்ள சோமாலியாவிலோ தங்கி சாப்பிட்டிற்கே வழியில்லாத ஏழைகளுக்குத் தொண்டு செய்யவில்லை? (அவை முஸ்லிம் நாடுகள்) ஏன் கிரகாம் ஸ்டேன்ஸ் ஆஸ்திரேலியாவில் தங்கி அங்குள்ள வசதியற்றோருக்கு உதவி செய்யவில்லை? (விவரம் தெரிந்தவர்கள்) ஏன் சோனியா காந்தி பொதுச் சேவை செய்ய இத்தாலியைத் தேர்ந்தெடுக்காமல் இந்தியாவில் ஒட்டிக்கொண்டார்? இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்போல் இறக்குமதி செய்யப்பட்ட மதங்களும், தலைவர்களும் நமது பாரதத்தைச் சூறையாடி வருகிறார்கள் என்பது புரிகிறதா?
  4. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற இந்து வேட்பாளர்களின் தொகுதிகளாகப் பார்த்து பங்களாதேஷ் முஸ்லீம்கள் தங்குகின்றனர். அடுத்த தேர்தலுக்குள் அங்கு நிலைமையை மாற்றிட முனைகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  5. 1989ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுமானால், பைபிளில் கூறப்பட்டுள்ளபடி அரசாங்கம் செயல்படும் என்று ராஜீவ் காந்தி கூறினாரே! இது மதவாதம் இல்லையென்றால், வேறென்ன?
  6. உலக முஸ்லிம் சிறுபான்மைச் சமுதாயத்தின் தலைவரான ஷேக்-அல்சையத் யூசும் சையது காசிம் அல் ரிபை, விசா இல்லாமலேயே கேரளாவில் நுழைய அனுமதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஓர் அரசாங்க விருந்தினருக்கான சகல மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டு, அவர் மதமாற்றத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவியாக அரசாங்கக் கார்களும் வழங்கப்பட்டன. இது தான் தேசியத்தை ஊக்குவிக்கும் லட்சணமா?
  7. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் (மதச்சார்பற்ற நாடுகள்) ஒரு முஸ்லிம் ஒரு பெண்ணுக்குக் கூடுதலாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றால் இந்தியாவில் மட்டும் அது ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?
  8. போப் இந்தியாவிற்கு வர எந்தத் தடையும் இல்லை. ஆனால் 1995ம் ஆண்டு நாக்பூரில் நடந்த மகர சங்கராந்தி விழாவில் கலந்துக்கொள்ள நேபாள மன்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் மதச்சார்பின்மையா?
  9. முஸ்லிம், கிறிஸ்தவன், பார்ஸி அல்லாத அனைவரும் இந்துக்கள் என்று இந்துச் சட்டம் சொல்கிறது. இது சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு விளக்கம். பிறகு எப்படி இன்றைய அரசியல்வாதிகள் இந்து சமுதாயத்தை இப்படித் துண்டு துண்டாகப் பிரித்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
  10. தென்னிந்தியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்று திப்பு சுல்தான் விரும்பினான். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதிகளைத் தாங்களே ஆள வேண்டும் என்பதற்காகத் திப்பு சுல்தானைத் தடுத்து நிறுத்தினர். அதனால் அவன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட வேண்டி வந்தது. அவன் என்ன இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரனா? அப்படியென்றால் பாபரும், ஔரங்கசீப்பும், அப்சல்கானும், கஜினியும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்களா?