தாக்குதலுக்கு யார் பொறுப்பு?

சமீப நாட்களாக ஹிந்துக்களின் விழாக்கள் நடைபெறும்போது அவர்கள் மீது முஸ்லிம்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவ்வகையில், ஸ்ரீராம நவமியின் போதும், நமது தேசத்தின் பல இடங்களில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு தீவிரத்துடன் தொடர்ந்தன.

இத்தாக்குதலை நடத்திய முஸ்லிம்களை தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர் சில போலி மதசார்பற்றவாதிகளும் ஊடகத்தினரும். “ஹிந்துக்கள் முஸ்லிம்கள் பகுதிகள் வழியாகச் செல்லக் கூடாது, அப்படிச் சென்றால் அங்கு நடைபெறும் வன்முறைக்கு ஹிந்துக்கள்தான் காரணம்” என இதற்கு காரணம் கூறுகின்றனர் இவர்கள். உதாரணமாக, என்.டி.டி.வியின் சீனிவாசன் ஜெயின், ‘முஸ்லிம் பகுதிகள் வழியாகச் சென்றது ஹிந்துக்களின் தவறு என்பதால் அவர்கள் மீதான தாக்குதலுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சி செய்வதாலும், தற்போதுள்ள ‘நிலைக்கு’ எதிராக ஹிந்து தலைவர்கள் அறிக்கைகள் கொடுப்பதாலும் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன’ என கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் கரௌலி பகுதியில் நடைபெற்ற வன்முறைகளை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ‘முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில்’ ஹிந்துக்கள் ஊர்வலம் நடத்துவது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று அஷோக் கெலாட் அரசை எச்சரித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில் இல்லாதபோது இந்நாட்டில் நடந்த டஜன் கணக்கான கலவரங்கள், குண்டுவெடிப்புகள், படுகொலைகளுக்கு யார் காரணம்? ‘முஸ்லிம் பகுதி’ என்றால் என்ன?  முஸ்லிம் வாழும் பகுதியில் ஹிந்துக்களோ கிறிஸ்தவர்களோ செல்லக்கூடாது என சட்டம் கூறுகிறதா? அப்படி செல்லக்கூடாது என்றால் அவர்கள் மற்ற மதத்தினர் வாழும் பகுதிகள் வழியாக செல்லாமல் தவிர்ப்பார்களா? என சமூக ஊடகத்தினர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

https://www.opindia.com/2022/04/stone-pelting-arson-hindu-procession-ram-navami-muslim-areas-songs-liberals-justify-violence-mob-ghettos/ https://www.timesnownews.com/india/karauli-communal-violence-pfi-had-warned-gehlot-govt-about-violence-during-hindu-new-year-rally-article-90636552