ஆக்ஸிஜன் தட்டுப்பாடு யார் குற்றம்?

கொரோனா சிகிச்சையில் ஆக்ஸிஜன் வழங்கல் என்பது இன்றியமையாதது. அனால் பல மா நிலங்களில் அதற்கு கடும் பற்றாகுறை உள்ளது. மக்கள் ஆக்ஸிஜன் தேவைக்காக சிலிண்டருடன் ஆலைகளின் வாசலில் தவம் கிடக்கின்றனர். பல மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்ஸிஜன் தேவை என கோரிக்கை வைக்கின்றன. ஆனால், இந்த தட்டுப்பாடுக்கு யார் காரணம் என மும்பை பி.எம்.சி ஆணையர் இக்பால் சிங் சாஹால் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் நெருக்கடிக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. இதற்கு மாநிலங்கள்தான் குற்றம் சாட்டப்பட வேண்டும். பல மாநிலங்கள் தங்கள் மா நிலத்தில் எத்தனை கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்பதை உண்மையாக ஒப்புக்கொள்ளக்கூட தயாராக இல்லை. மேலும், மாநிலங்கள் முறையாக கொரோனா பரிசோதனைகள் செய்வதில்லை. அதிகமான பரிசோதனைகள்தான் உண்மை நிலையை எடுத்துக்காட்டும். அரைகுறை தகவல்கள் ஆபத்து தரும். இதுபோன்ற சூழலில் மத்திய அரசு அவர்களுக்கு சரியான அளவு ஆக்ஸிஜனை எவ்வாறு ஒதுக்கமுடியும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.