சில நாட்களுக்கு முன் ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்ட வார்த்தை “ஆந்தோலன் ஜீவி” (தொழில்முறை போராட்டக்காரர்கள்). பொதுவாக உண்மையான போராட்டங்களில் அதில் இருக்கும் நியாயங்களே வினையூக்கியாக இருக்கும். ஆனால், இன்றைய உலகலாவிய போராட்டங்கள் பலவும் பொய்களால் கட்டமைக்கப்பட்டு தூண்டிவிடப்படுபவையாகவே உள்ளன. உதாரணம் டிரம்பிற்கு எதிரான அமெரிக்க போராட்டம், ஜல்லிக்கட்டு, சி.ஏ.ஏ, விவசாய போராட்டம் போன்றவை. இப்போராட்டங்களுக்கு தேவை எல்லாம், யோசிக்காமல் போராடும் ஆட்கள், விளம்பரம், பண உதவி செய்வோர், உத்திகள் வகுப்பாளர் ஆகிய நான்கு வகையானவர்கள் மட்டுமே. இதில் முன்ணிரண்டு பேர்களை எளிதில் அடையாளம் காணலாம், நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பின் இருவர்கள்தான் ஆபத்தானவர்கள். இவர்களை அடையாளம் காண்பதும் கடினம். இவர்கள் ஒடுக்கப்பட்டால்தான் சமூகத்தில் அமைதி நிலவும். இதைதான் அரசு தற்போது செய்துவருகிறது.