பாரத கைத்தறித் தயாரிப்புகள், கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், நெசவாளர்களின் கைவினைப் பொருட்களைக் கொண்ட “நெசவு 2022” கைத்தறி கண்காட்சியை மத்திய குடிசைத் தொழில் கழகம் நடத்துகிறது. 2022 ஏப்ரல் 2 முதல் 12 வரை, சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் உள்ள ஷோரூமில், காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்தியேகமாக கையால் நெய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், துணிகள், ஆடைகள், அணிகலன்கள், தளவாடங்கள், வீட்டுத் துணிகள் மற்றும் பலவற்றைக் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.