நாமும் பங்கு கொள்வோம்

நமது விஜயபாரதம் மின்னிதழ் தினசரி தோராயமாக எத்தனை நபர்களை சென்றடைகிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். இது நமது இதழை மேலும் செம்மையாக்க உதவும் என்பதால் நீங்கள் இதனை தினமும் எத்தனை பேர்களுக்கு அனுப்பி (Forward) வருகிறீர்கள் என்பதை விஜயபாரதத்திற்கு +91 96004 78526 என்ற எண்ணில் குறுஞ்செய்தியாக (SMS) தெரிவித்தால் உதவிகரமாக இருக்கும். அதனை தாங்கள் அனுப்பும் தனி நபர்கள் எண்ணிக்கை, குழுக்களின் எண்ணிக்கை, அந்த குழுக்களில் சுமார் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம், மொத்தம் என்ற வகையில் ஓரிரு நாட்களில் அனுப்பினால் நலம்.

உதாரணமாக தனி நபர்கள் 50, குழுக்கள் 5 அதில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 500, மொத்தம் 550 என்ற வகையில் அனுப்பலாம்.

மேலும் விஜயபாரதம் மின்னிதழுக்காக தாங்கள் அனுப்ப விரும்பும் தங்கள் பகுதி செய்திகள், கருத்துகள், ஆலோசனைகளை webvijayabharatham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவைக்கலாம்.

ஆசிரியர்