பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா, “வங்கதேசத்தவர், ரோஹிங்கியாக்கள் போன்ற சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினை என்பது ஹிந்து முஸ்லீம்கள் பற்றியது அல்ல. இது பாரதத்தை பற்றியது. அவர்கள் எங்கிருந்தாலும் சமூகத்தை புற்றுநோய் போல காயப்படுத்துகிறார்கள். சட்டவிரோத குடியேறிகள், நாட்டில் குற்ற சதவீதத்தை அதிகரிக்கின்றனர். சங்கிலி பறிப்பு, திருட்டு, கொலை, கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர், முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்படுகின்றன என்பது போன்ற பதற்றம் ஏற்படுத்தும் அறிக்கைகளை கொடுத்து இதை ஹிந்து முஸ்லிம் பிரச்சினையாக யாரும் மாற்ற வேண்டாம். பாரத மக்கள் இதில் ஒன்றுபட வேண்டும். இது தேச பாதுகாப்பு மற்றும் நம் குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஸ்ரீராமர், அனுமார் யாத்திரைகளை அவர்கள் தாக்கினர், கலவரம் ஏற்படுத்தினர். இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வருகிறது? பிரபல வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் ஏன் வாதிடுகின்றனர்?” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.