மேற்கு வங்க மாநில தேர்தலும் – மம்தாவின் அடாவடித்தனமும்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  24 மணி நேர பிரச்சாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது.   தேர்தல் வரலாற்றில் ஒரு முதல்வருக்கு 24 மணி நேர பிரச்சாரத்திற்கு தடைவிதித்தது இதுவே முதல் முறையாகும்.   இதை தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்க்கும் தேர்தல் ஆணையம் 48 மணி நேர பிரச்சாரத்திற்கு தடைவிதித்துள்ளது.   முதல் மூன்று கட்ட தேர்தல் அமைதியாகவும்,  எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் , அதிக அளவில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.   நான்காம் கட்ட தேர்தல்,  குறிப்பாக முஸ்லீம்கள் அதிக வாழும் பகுதியில் நடந்த  நான்காம் கட்ட தேர்தலில் துப்பாக்கி சூடு, தடியடி போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

பிரச்சாரத்தின் போது, முஸ்லீம்கள் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்றும்,   பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைகளை முற்றுகையிட மக்களைத் தூண்டியதாகவும் புகார் எழுந்தது,  இந்த புகாரின் அடிப்படையில்  முதல்வர் மம்தாவிற்கு 24 மணி நேர பிரச்சார  தடை விதிக்கப்பட்டுள்ளது.    மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக பதில் அளித்துள்ளார்.  உண்மையில்  கடந்த 15 வருட ஆட்சியில் மம்தா சிறுபான்மையினத்தவரான முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயலாற்றிய விவரங்களை பார்த்தால்,  மத நல்லிணக்கம் என்பது பொய்யான கருத்து என்பது புலனாகும்.

கலவரம் நடந்த காரணத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மம்தாவின் பொறுப்பற்ற பேச்சே கலவரத்திற்கு முக்கியமான காரணம் என்பதை புரிந்து கொள்ளவில்லை.    கூச் பெஹர் மாவட்டத்தில்,  கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படும் சிதால்குச்சி சட்ட மன்ற தொகுதியில்,  ஜோர்பர்கி கிராமத்தில் உள்ள ஒரு பூத்தில் வாக்கு பதிவின் போது, மிரினால் ஹேக் என்ற சிறுவன் நீண்ட நேரமாக வேடிக்கை பார்த்திருக்கிறான்.  என்ன காரணத்தாலே அவன் திடீரென மயங்கி கீழே விழுத்திருக்கிறான்.  இதை பார்த்த  மத்திய பாதுகாப்பு படையினர், அந்த சிறுவனை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்கு போயிருக்கிறார்கள்.   ஆனால் மத்திய பாதுகாப்பு படையினர் தாக்கியதால் தான் அந்த சிறுவன் உயிரிழந்து விடடான் என மம்தாவின் கட்சியினர் செய்த பொய் பிரச்சாரத்தின் காரணமாகவும், திரிணாமூல் கட்சியினர் பாதுகாப்பு படையினரிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயலும் போது ,  துப்பாக்கி சூடு வரை சென்று அப்பாவி மக்கள் நான்கு பேர்கள் இறக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கவும், தடுக்கவும் புதிதாக இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி ஒன்று உருவாகியுள்ளார். பா.ஜ.கவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பாஸ் சித்திக் இந்த புதிய கட்சி துவங்கியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் உத்தரவின் படிதான் தேர்தல் ஆணையமும், போலிஸாரும் செயல்படுகின்றனர். மாநிலத்தில் ஏராளமான போலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மேற்குவங்கத்தில் வகுப்பு மோதலை உருவாக்க பா.ஜ.கவினர் முயற்சிக்கின்றனர். உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து மேற்குவங்கத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர். குஜராத்தைப் போல மேற்குவங்கம் மாறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.  இந்த செய்தியை தமிழகத்தில் உள்ள கலைஞர் தொலைக்காட்சி  தொடர்ந்து ஒலிப்பரப்பியது.   ஊடக தர்மத்தை பேசும் தி.மு.க. இம்மாதிரியான செய்திகளை வெளியிடுவது சரியானதா என்ற கேள்வியை எவரும் எழுப்பவில்லை.

மம்தாவிற்கு 24 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டபோது,  முறையாக மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பி அவரின் பதிலுக்கு பின்னர் தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.  ஆனால்   பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான,ராகுல் சின்ஹா சிட்டால்குச்சியில் குறைந்தது 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என  தெரிவித்து இருந்தார் என கூறி நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்,  ராகுல் சின்ஹாவிடம் எவ்வித விளக்கம் கேட்கவில்லை,  பாரதிய ஜனதா கட்சியினரிடமும் விளக்கம் கேட்காமல்,  48 மணி நேர தடை விதித்துள்ளது.   இது பற்றி எவரும் கேள்வி கேட்கவில்லை.  இது பற்றி தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் கூட முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை.   மத்திய பாதுகாப்பு படையினர் எட்டு போ்களை கொன்று விட்டார்கள்,  இது வரும் 17ந் தேதியும் நடைபெற வாய்புள்ளது  என கூறியதற்காக மேற்படி நடவடிக்கை என தெரிவித்துள்ளது  தேர்தல் ஆணையம் .

மம்தாவிற்கு கோபம் ஏற்பட காரணம்,  2011 மற்றும் 2016-ல்  முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது போல், 2021லிலும் முஸ்லீம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், முஸ்லீம் வாக்குகளை பிரிக்க இரண்டு அவதாரங்கள் களத்தில் இறங்கியுள்ளன.   ஒன்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரான ஒவைசியின்  எம்.ஐ.எம்.ஐ.எம். கட்சியும்,   அப்பாஸ் சித்திக் துவக்கிய இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சியும்  மம்தாவின் கற்பனையில் மண்ணை வாரி போட்டு விட்டார்கள், இதுவே  மம்தாவின் கோபத்திற்கு முக்கியமான காரணமாகும்.   இது ஏப்ரல் மாதம் 3ந் தேதி ஹூப்ளியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்,  சிறுபான்மையினரின் வாக்குகளை குறிப்பாக முஸ்லீம்களின் வாக்குகளை பிரிய விடக்கூடாது என்கின்ற ரீதியில்  பேசியது தற்போது சிந்திக்க வேண்டியதாகும்.

துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை விசாரனை செய்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள செய்தியில்,  “வாக்குச் சாவடியில் வரிசையாக நிற்கும் வாக்காளர்களின் உயிரையும், பிற வாக்குச் சாவடியினரின் உயிரையும், கும்பல் பறிக்க முயன்றதாலும்,  அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்க முயன்றதாலும், மேலும் அவர்கள் தங்களின்    உயிர்களையும் காப்பாற்றுவதற்காகவும்,  சிஐஎஸ்எஃப் பணியாளர்களால் துப்பாக்கிச் சூடு நடத்துவது முற்றிலும் அவசியமானது என்று தேர்தல் ஆணையம் கூறியது.    மேலும் கூச் பெஹார் எஸ்.பி. டெபாஷிஷ் தார்  கூறியதாக செய்தி சேனல்களில்  “சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று கூறப்பட்டதை ஒலிப்பரப்பியதையும்  தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.   ஆகவே மம்தாவின் நாடாகம் சிறுபான்மையினரின் காவலராக காட்டிக் கொள்ள எடுத்த முயற்சிக்கு விழுந்த அடியாகும் 24 மணி நேர தடை. .

ஈரோடு சரவணன்