வங்கிகளின் வாராக் கடன் வசூலுக்கு என்.ஏ.ஆர்.சி.எல்., என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. வங்கிகள் அவற்றின் வாராக் கடனை இந்த அமைப்பிடம் ஒப்படைத்து விடும். இதனால் வங்கிச் சேவைகள் மேம்படும். வாராக் கடனை வசூலிக்கும் இந்நிறுவனத்திற்கு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கப்படும். வாராக் கடனில் 15 சதவீதம் ரொக்கமாக குறிப்பிட்ட வங்கிகளுக்கு வழங்கப்படும். எஞ்சிய 85 சதவீத கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய கடன் உறுதிப் பத்திரங்களை என்.ஏ.ஆர்.சி.எல் வழங்கும். கடன் வசூலிப்பில் ஏற்படும் இழப்பிற்கு இப்பத்திரங்கள் ஈடாக வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் 5.01 லட்சம் கோடி வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.