விஷ்வ குரு பாரதம்

பாரதத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 7 அத்தியாயங்களாக நடைபெற்ற டி.டி நியூஸ் மாநாட்டில், தலைசிறந்த பிரமுகர்கள், கொள்கை வகுப்பாளர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் இளைஞர் சக்தி, சமுதாய அதிகாரம், வாழ்க்கையை எளிதாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. மாநாட்டின் நிறைவாக, ‘பாரதம் முதலில்’ வெளியுறவுக் கொள்கை, பாரதத்தை உலகின் குருவாக மாற்றுதல் என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் நேரடி கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், ‘பாரதத்தின் வெளியுறவுக் கொள்கை திறமை (capability) நம்பகத்தன்மை (Credibility), சூழல் (Context) ஆகிய 3C-க்கள் மாற்றியமைப்பதாக இருக்கும். திறமையில் பாரதத்தின் எழுச்சி, கொரோனா காலகட்டத்தில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நமது பொருளாதார எழுச்சி, தற்போது பி.பி.பி (PPP)  அடிப்படையில் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. சர்வதேச செயல்திட்டங்களை வடிவமைப்பதில் பாரதம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகளாவிய மனிதநேய நெருக்கடி ஏற்படும் காலங்களில், ‘முதலில் குரல் கொடுக்கும்’ தேசம் பாரதம்’ என தெரிவித்தார்.