டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் பாரத வீரர் நீரஜ் சோப்ரா. இதுகுறித்து ஆங்கில நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் என கூறிக்கொண்ட உவே ஹான், ‘ஒலிம்பிக் பயிற்சி குறித்து மத்திய அரசிடம் எந்த திட்டமும் கிடையாது, விளையாட்டு அமைப்புகள் எங்களுக்கு உதவவில்லை, வீரர்களுக்கு உயர்தர உணவுகளை வழங்குவதில்லை, பாரத அதிகாரிகள் என்னை மிரட்டினர்’ என தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை பிரதமர் மோடி, பா,ஜ.க மீது உள்ள வன்மத்தால் கலைஞர் செய்திகள் உட்பட சில தொலைக்காட்சிகள் வெளியிட்டு தங்களது வன்மத்திற்கு ஆறுதல் தேடின. ஆனால், இக்கட்டுரை வெளியான மறுநாளே அந்த செய்தி தவறானது என நீரஜ் சோப்ரா மறுத்ததுடன் பாரத அரசு தனக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டு, பிரதமர் மோடிக்கு தனது நன்றியினை தெரிவித்தார். உவே ஹான் பயிற்சி நீரஜுக்கும் பாரத அரசுக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பதால் அவரை நீக்கிவிட்டு ஜெர்மனியை சேர்ந்த கிளாவ்ஸ் பார்டோனியெட்ஸ் என்ற பயிற்சியாளரை அமர்த்தியது. அதனால்தான், காழ்ப்புணர்ச்சியில் உவே ஹான் இப்படி கருத்து தெரிவித்தார் என்பது கூடுதல் தகவல்.