ஞானவாபி குறித்து வி.ஹெச்.பி

உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி தற்போதுள்ள ஞானவாபி மசூதியை ஔரங்கசீப் விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக கூறப்படுகிறது. மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் டெல்லியில் பேசுகையில், ‘ஸ்ரீராம ஜென்மபூமியில் தற்போது ஸ்ரீராமருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கட்டி முடிக்கப்படும் வரை ஞானவாபி மசூதி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். மசூதியின் வெளிப்புற சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். மசூதிக்குள் உள்ளே செல்ல பெண்கள் கோரிக்கை விடுக்கவில்லை. வெளிப்புற சுவற்றில் உள்ள அம்மனை தரிசிக்கவே விரும்புகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.