குஜராத் மாநிலம் ஜுனாகரில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூன்று நாள் மத்தியக்குழு கூட்டத்தில், மதம் மாறிய பட்டியலின பழங்குடியினரை எஸ்.சி மற்றும் எஸ்.டி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களையும் இந்த பட்டியலில் இருந்து விலக்க வேண்டு. உண்மையான படியலின பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு உரிமை கிடைக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தர்மபிரசாரம், ஆச்சாரியர்கள், மடங்கள், கோயில்கள், அர்ச்சகர்கள், புரோகிதர்களை தொடர்பு கொண்டு, தர்மயாத்திரைகள் வழியாக நடத்தப்படும் ஹித்தாசிந்தக் பிரச்சாரத்தின் மூலம் 50 லட்சம் நலம் விரும்பிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுவார்கள். சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஏற்படுத்த முயற்சித்தல். சுற்றுச்சூழலையும் சூழலியலையும் பாதுகாப்பதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்துதல். கிறிஸ்தவர்கள் கடந்த 350 ஆண்டுகளாக ஹிந்துக்களை துன்புறுத்துதல், இனப்படுகொலைகள், வெகுஜன மரணதண்டனைகளை நடத்தினர். எனவே, போப் பாரதத்திற்கு வரும்போது, இதற்கெல்லாம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் மரியாதை காட்ட வேண்டும், பாரதத்தில் மத மாற்றங்களை நிறுத்துமாறு அறிவிக்க வேண்டும். 9வது சீக்கிய குருவான குரு தேக் பகதூர் ஜி, முகலாய கொடுங்கோன்மையிலிருந்து ஹிந்துக்களைப் பாதுகாக்க தனது உயிரைத் தியாகம் செய்தார். அவரது போதனைகளைப் பிரச்சாரம் செய்ய, நாடு முழுவதும் நிகழ்ச்சிகள், மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும். கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அன்னிய மதத்தை ஏற்று, மதம் மாறியவர்கள், வி.ஹெச்.பியின் நாடு தழுவிய ‘தாய்மதம் திரும்புதல்’ பிரச்சாரத்தில் மீண்டும் தங்கள் மூதாதையர் மதத்திற்கு அழைத்து வர முயற்சி. கட்டாயம், பொய்யுரை, வசீகரம், பொய் வாக்குறுதி, பயம், சதி போன்ற காரணங்களால் மதம் மாறியவர்கள் தங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய தாய்மதத்திற்குத் திரும்பி மதத்தைத் அவர்களின் முன்னோர்களின் புகழ்பெற்ற பாரம்பரியங்களின் பங்குதாரர்களாக இருக்க வி.ஹெச்.பி ஊக்குவித்தல். மத மாற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்துதல். சமுதாயம் மற்றும் நாடு முழுவதும் முன்னேற்றம் அடைய நமது பட்டியலின பழங்குடியின சகோதரர்களை இணைத்து பணிபுரிதல், வி.ஹெச்.பி சமூக விழிப்புணர்வு பணிக்காக சுமார் 1,000 இளைஞர்களை இதில் இணைத்தல். மனிதநேயம் மதிப்பிழக்கப்படுவதைத் தடுக்க சமுதாயத்தில் சம்ஸ்காரங்களை வளர்ப்பதை ஊக்குவித்தல். 2024ல், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும். அதற்குள் நடைபெறவேண்டிய அமைப்பின் விரிவாக்கத் திட்டம் குறித்தும் ஆலோசனை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.