ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆனந்த் பண்டிட், சந்தீப் சிங் ஆகியோர் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனப்படும் வீர் சாவர்கர் குறித்த திரைபடத்தை தயாரிக்க உள்ளனர். இத்திரைப்படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார். ‘சுதந்திர வீர் சாவர்க்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர், ரன்தீப் ஹூடா, சாவர்க்கர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு, மஹாராஷ்டிரா, அந்தமான் நிகோபர் தீவுகள், லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது. இத்திரைப்படத்தை வரும் ஜூனில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பாரதத்தின் சுதந்திரத்திற்காக பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 12 ஆண்டுகள் அந்தமான் தனிமை சிறையில் இருந்தவர். அங்கு கொடூர சித்ரவதைகளை அனுபவித்தவர். பாரத தந்திரத்திற்காக பாரதத்தில் அபிநவ பாரத சங்கத்தையும் லண்டனில் சுதந்திர பாரத சங்கத்தையும் உருவாக்கினார். இன்று இருக்கும் ஹிந்து அமைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்த படை திரட்டியவர், இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனித்து செயல்பட்டதால் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்.
இதுகுறித்து ரன்பீர் ஹூடா கூறுகையில், சில கதைகள் சொல்லப்படுகின்றன, சில வாழ்கின்றன. சாவர்க்கர் படத்தின் ஒருபகுதியாக இருக்கப்போவதை நினைத்து பெருமையாகவும், உற்சாகமாகவும் உள்ளது. பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்க பலர் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் அதற்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை. வீர் சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அறியப்படாத அவருடைய கதையைச் சொல்ல வேண்டும். எனக்கு இது மற்றொரு சவாலான பணியாக இருக்கும் இருக்கும்’ என்றார்.