பொய் புகாரில் விஏஓ, உதவியாளர் கைது

கோவை, ஒட்டபாளையம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமியின் காலில் பட்டியலினத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. இதனையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விவசாயி கோபால்சாமி மீது அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த சில நாட்களில் இச்சம்பவத்தின் மற்றொரு முகமாக நிலப்பிரச்சனை தொடர்பாக வி.ஏ.ஓவிடம் பேசிக் கொண்டிருந்த கோபால்சாமியை, முத்துசாமி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி தகாத வார்த்தையில் திட்டிய வீடியோ வெளியானது. இதை மறைக்கவே முத்துசாமி காலில் விழுந்து நாடகமாடியதும், வன்கொடுமை புகார் கூறியதும் தெரியவந்தது. இதனையடுத்து வி.ஏ.ஓ கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அன்னூர் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.