ஜி-7 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘தடுப்பூசி மட்டுமே கொரோனா சவாலுக்கு நீடித்த ஒரே தீர்வு’ என்று கூறியுள்ளார். மேலும், ‘உலக நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் பாரதம் தனது பங்கை சரியாக செய்யும். கொரோனா தொடர்பான போக்குகளால் புவிசார் அரசியல் மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன. பொது சுகாதார அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா தொடர்பான போலி ஆன்லைன் செய்திகள் அதிகமாக உள்ளன. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 2014 முதல் பாரதம் பசுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உஜ்வாலா, எல்.இ.டி விளக்குகள் விநியோகம், வனப்பகுதி விரிவாக்கம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் இதற்காக எடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.