உத்தராகண்ட் கர்டாங் காளி

உத்தரகாண்ட் அரசு உத்தரகாசி மாவட்டம் நெலோங் பள்ளத்தாக்கில் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான மரப்பாலமான கர்டாங் காளியை சமீபத்தில் புதுப்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிட்டுள்ளது. 136 மீ நீளம் மற்றும் 1.8 மீ அகலம் கொண்ட பாலம் கங்கோத்ரி தேசிய பூங்காவிற்குள், உத்தரகாசி மாவட்ட தலைமையகத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திபெத்துக்கான பழங்கால வர்த்தகப் பாதையின் ஒருபகுதியாக இருந்த கார்டாங் காளி பாலம், பெஷாவர் பதான்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 1962ல் பாரத சீனப் போரைத் தொடர்ந்து மூடப்பட்டது. பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத நிலையில் சேதமடைந்தது. தடைசெய்யப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.