யு.பி.ஐ சாதனை

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக மத்திய அரசு துவக்கிவைத்த யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) சில்லறை டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மற்ற அனைத்து சில்லரை பண பரிவர்த்தனை முறைகளைவிட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதத்தில் நடைபெறும் சில்லறை விற்பனையில் ஏறத்தாழ 10 சதவீதம் யு.பி.ஐ மூலமாகவே தற்போது நடைபெறுகிறது. 2021ல் யு.பி.ஐ மூலம் ரூ. 41 லட்சம் கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கடன் அட்டை, டெபிட் கார்டு பரிவர்த்தனை முறைகளைவிட இது 2.8 மடங்கு அதிகம். கொரோனா 2வது அலை காலகட்டத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை 4 மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.