உபாகர்மா

வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் ஆவணி அவிட்ட பண்டிகைதான். உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம்.  அதாவது வேதாரம்பம் வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் உபாகர்மா கொண்டாடப்படுவதில்லை. இப்பண்டிகை. ஆவணி மாதம் அவிட்ட  நக்ஷத்திரத்தில்  வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் பெயர் உண்டு. முறையாக உபாகர்மா செய்து வீரியத்துடன் அந்தந்த வருடங்களில் நாம் செய்யும் கர்மாக்களின் பலனை பெற்றுய்ய உபாகர்மா.

வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகிறதாம். இந்த யாதயாம தோஷம். இத்தகைய யாதயாம தோஷம் நீங்கவே உபாகர்மா. உதாரணமாக, கோயில்களுக்கு கும்பாபிஷேகம், பவித்ரோத்ஸவம் என்று செய்கிறார்கள். ஏன்? அந்தந்த கோயிலில் நடந்த விழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் இறைவனுக்கு நித்தியப்படியாகச் செய்யப்படும் இறை செயல்பாடுகளில் குறைவு என பலவற்றுக்கும் பரிகாரம் காணவேண்டி செய்கிறோம். அதே போல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்ட குறை,  ஓதுவதில் பின்னம் அடைந்த குறை, ஓதுவதில் அக்கறையின்மை, வேகமாக சொல்லுதல் என பல விதமாக நாம் செய்த குறைபாடுகளை போக்கவே இந்த உபாகர்மா.

இந்த வைபவத்தில் நாம் மட்டுமல்ல இறைவனைத் தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் நான்முகனும்  சம்பந்தப்பட்டுள்ளார்கள். வேதத்தை நான்முகனோ  ரிஷிகளோ இயற்றவில்லை என்பது  தெரிந்ததே. அவை இறை ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது. அதற்கான வாக்யம்::”ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி”.

இறைவனின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன்முதலில் பிரஹ்மாவிற்கு சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார். நான்முகனுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களான  பிரஜாபதிகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலானவர்கள் சந்தை, திருவை என தினமும் ஓதி உச்சரித்து வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள். நான்முகனிடமிருந்து  வேதத்தை உபதேசம் பெற்ற நாள் ஆவணி அவிட்டம் அன்று.ஆதலால் இது வேதத்தின் உதித்த நாளாக்கான விழாவாகவும் கொள்ளலாம். உபாகர்மாவை இன்றய தினம் அக்கறையுடன் செய்வதால் நம்மிடம் இருக்கும் அல்லது நமக்கு தெரிந்த குறைந்தபட்ச  வேத மந்திரமானது அதனது வீர்யத்தோடு நம்முடன் தொடர்ந்து கூடியதாகயிருக்கும். நமக்கும், நமது குடும்பத்திற்கும் அல்ல அள்ளக்குறையாமல் நற்பயன்கள் பெருகும்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி