காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தானில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது மேலும் 1,000 வென்டிலேட்டர்கள் தேவை என அம்மாநில அரசு கோரியுள்ளது. ஆனால், கடந்த வருடக் கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது, ‘பி.எம் கேர்ஸ்’ நிதியத்தின் கீழ் 1,500 வென்டிலேட்டர்கள் அம்மாநிலத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டன. அவைகளில் ஒன்றுகூட தற்போதுவரை பிரிக்கப்படாமல், தூசு படிந்து காணப்படுகின்றன என தெரியவந்துள்ளது. பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் இவற்றில் சில சரியாக வேலை செய்யவில்லை. சரியாக வேலை செய்யாத அவற்றை மீண்டும் பழுதுபார்த்து பயன்படுத்த அம்மாநில அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தானில் 6,33,951 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,89,178 பேர் சிகிச்சையில் உள்ளனர். உள்ளனர். கொரோனா காரணமாக 4,558 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.