உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில், 1,011 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி மையம், 8,603 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உரத்தொழிற்சாலை உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனால், வருடத்திற்கு 175 மாணவர்கள் சேர்க்கையுடன் முழு வீச்சில் செயல்பட தொடங்கிவிட்டது கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி. ஆனால் மதுரையில் இடம் தேர்வு செய்தல் முதல் வாடகை கட்டிடத்தில் மாணவர்கள் சேர்க்கை என மத்திய அரசின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல், மாணவர்களின் கல்வி, மக்களின் ஆரோக்கியம் போன்ற மிக முக்கியமான விஷயங்களில்கூட தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு. இதனால், வருடத்திற்கு 175 மருத்துவ மாணவர் இடங்களையும் , பல லட்சம் மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சையையும் தமிழக மக்கள் இழந்து வருகின்றனர்.