ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வின் சமீபத்திய ஓராண்டுகால ஆட்சியில், ஹிந்துக்கள், அவர்களின் கோயில்கள், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. தி.மு.க தலைவர்களின் ஹிந்து விரோத பேச்சுக்கள், செயல்பாடுகள், கோயில்கள் இடிப்பு, பட்டிணப்பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை, அரசு விழாக்களில் ஹிந்து முறைப்படி சடங்கு செய்ய எதிர்ப்பு என இதற்கு பெரிய பட்டியலே போடலாம். இந்நிலையில் கோயில் ஒன்றிற்கு சென்றிருந்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு, அங்கு கட்டப்பட்டு இருந்த காவி கொடிகளை பார்த்து கோபமடைந்தார். உடனே அவற்றை அகற்றுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது ஹிந்துக்களிடையே சர்ச்சையையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்தியுள்ளது. காவிக்கொடி என்பது ஏதோ ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தும் கொடி என அவர் எண்ணிவிட்டார் போலும். காவி என்பது ஆண்டிகள் முதல் அரசர்கள்வரை அனைத்து ஹிந்துக்களும் பன்னெடுங்காலமாக பயன்படுத்திவரும் ஒரு பொதுவான நிறம். காவிக்கொடி என்பது துறவு மற்றும் தியாகத்தின் மேன்மைமிகு அடையாளம். அக்காலத்தில் அரசர்கள் கொடிகளின் சின்னங்கள் புலி, மீன், வில் என வெவ்வேறாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த கொடிகளின் பொதுவான பின்னணி காவி நிறம்தான். ஒரு ஹிந்துவாக, பக்திமானாக தன்னை காட்டிக்கொள்ளும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபுவுக்கு இந்த அடிப்படை தத்துவங்கள் கூட தெரியாமல் உள்ளது வேதனை.