உக்ரைனில் சிக்கிக்கொண்ட நமது நாட்டு மாணவர்களை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு அல்லும் பகலும் பாடுபட்டு, அயராத முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய மாணவர்களை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் மத்திய இணையமைச்சர் எல். முருகன். ஒவ்வொரு மாணவருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்றார். ஆனால், வந்தவர்களில் சில மாணவர்கள் பதில் வணக்கம்கூட தெரிவிக்காமல் சென்றனர். அவரை ஒரு மத்திய அமைச்சராக அவர்கள் அறியாவிட்டாலும்கூட, ஒரு சக மனிதராக, வயதில் மூத்தவராக, தங்களை வரவேற்க வந்தவராக கருதி பதில் வணக்கம் தெரிவித்திருக்கலாமே? இதுதானா இவர்கள் படித்த லட்சணம், இவர்கள் எல்லாம் மருத்துவம் படித்து எப்படி சமூகத்திற்கு சேவை செய்வார்கள்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.