அஜ்மீர் தர்காவைச் சேர்ந்த கௌஹர் சிஸ்டி என்ற மதகுரு, முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிக்க அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. தனது வீடியோ உரையை நிகழ்த்திய பிறகு அன்று அவர், ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லாலை கொன்ற பயங்கரவாதிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியைச் சந்திக்க உதய்பூருக்குச் சென்றுள்ளார். அவரை சந்தித்து பேசுகையில், கன்னையா லாலை தாக்கி கொன்ற பிறகு ஒரு குழப்பமான வீடியோவை வெளியிடுமாறு ரியாஸிடம் கூறியதாக கூறப்படுகிறது. தற்போது காதிம் கௌஹர் சிஸ்டி தலைமறைவாக உள்ளார். கொலைகாரன் ரியாஸ் அட்டாரியும் அஜ்மீருக்கு இவரை சந்திக்க அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், தற்போது ராஜஸ்தானில் காவலில் வைக்கப்பட்டுள்ள அன்வர் உசேனையும் சிஸ்டி அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌஹர் சிஸ்டி அஜ்மீர் தர்காவின் அஞ்சுமன் கமிட்டியின் தலைவரான சர்வர் சிஸ்டியின் மருமகன் ஆவார். சிஷ்டி தன்னை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர் என்று கூறியுள்ளார். கடந்த ஜூன் 17 அன்று, தர்கா வாயிலுக்கு வெளியே நடந்த ஊர்வலத்தில் கௌஹர் பங்கேற்று பேசுகையில், “நம்முடைய நபியை யாராவது இழிவுபடுத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அந்த நிந்தனைக்கு ஒரே ஒரு தண்டனைதான்” என்று அந்த கும்பலிடம் பேசினார். அதற்கு அவரது ஆதரவாளர்கள், “தலை துண்டித்தல்தான்” என்று பதிலளித்தனர். காதிமின் மாமா சர்வார் சிஸ்டி, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், அவர் வழிநடத்தும் இயக்கத்தால் நாடு குலுங்கும் என்றும் மிரட்டியுள்ளார்.