அரைவேக்காட்டு டுவிட்டர் பதிவு

மோடியை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தன் அரைவேக்காட்டு வரலாற்று அறிவை வெளிப்படுத்தி யுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.  தன் சமீபத்திய டிவிட்டர் பதிவில், ‘ மார்கோஸ், முசோலினி, மிலோசெவிக், முபாரக், மொபுட்டு, முஷாரஃப், மைக்கோம்பெரோ’ என சர்வாதிகளின் பெயர்கள் அனைத்தும் ‘எம்’ என்ற எழுத்திலேயே துவங்குகின்றன என பதிவிட்டுள்ளார்.  ஆனால் இவர்களைவிட பெரிய சர்வாதிகளான ஹிட்லர், ஸ்டாலின் பெயர்களை ராகுல் குறிப்பிட வில்லை. மேலும் சர்வாதிகாரத்தின் உச்சமாக, ஆறரை கோடி மக்களின் இறப்புக்கு காரணமான கொடுங்கோலன் ‘மா சேதுங்’ பெயரை ராகுல் இதில் குறிப்பிடவில்லை. அவர் பெயரும் ‘எம்’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது. இது ராகுலின் சீனாவுடனான பாசத்தை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.