டிவிட்டர் தலைவர் ஜாக் டோர்சி, ஆர்.எஸ்.எஸ்-உடன் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவா இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு, கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுபட, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் நன்கொடை அளித்துள்ளார். இதனைத் தவிர அவர், கேர் இந்தியா தொண்டு நிறுவனத்துக்கு 1 கோடி டாலர், எய்ட் இந்தியாவுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிதியுதவி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் போன்ற உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு துணைபுரியும். ஆனால், இந்த நன்கொடையை பொறுத்துக்கொள்ள முடியாத காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த கல்சா அமைப்பினர், இஸ்லாமிய அடிப்படைவாதியான ஷர்ஜீல் உஸ்மானி, சலீமா குல், ஆசிப் கான், ரவி நாயர், கிரிவால், சையத், ரிம்மி கௌர் உள்ளிட்ட பல லிபரல்கள் ஜாக் டோர்சியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.