நீலகிரி மாவட்டம் கூடலூர் சுங்கம் வனதுர்கா கோயிலுக்கு செல்லும் வழியில் முனீஸ்வரன் கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயில் போக்குவரத்து பணிமனைக்கு அருகில் உள்ளதால் பணிமனை விரிவாக்கம் செய்ய இடையூராக இருப்பதாக கூறி அக்கோயிலை அப்புறப்படுத்த தமிழக அரசின் போக்குவரத்துத்துறை முயற்சி மேற்கொண்டது. இந்து முன்னணி அமைப்பினர், இதனை கண்டித்து கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளது.