நாட்டில் என்ன நடக்கிறது நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்க பட்ட அரசு ஒரு சட்டத்தை இயற்ற அருகதை அற்றதா? தெளிவாக இதுதான் எங்கள் திட்டம் என்று தேர்தல் அறிக்கை விட்டு , வெற்றி பெற்ற அரசு அதனை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்துவது தானே ஜன நாயகம்.
.
இல்லை .. இல்லை அது இல்லை .. உலகில் பல மாபியாக்கள் இருக்கிறார்கள் .. மிகவும் பலம் வாய்ந்தவர்கள். MMM Men, Mission, Money இப்படி ஆள் பலம், இயக்க பலம் பண பலம் நிறைந்தவர்கள். அவர்கள் சொல்வது பதவியா பணமா எது வேண்டுமானாலும் அனுபவித்து கொள்ளுங்கள்.. ஆனால் நிர்வாகத்தில் நாங்கள் எங்கு இடித்து உரைக்கிறோமோ அந்த விஷயத்தில் இருந்து விலகி கொள்ளுங்கள் இல்லையேல் நடப்பதே வேறு.
ஆம்… இதில் குறிப்பாக பாரதம் முன்னேறக் கூடாது. கிட்டத்தட்ட மெக்காலே இந்தியர்களை வைக்க நினைத்த நிலை. இந்தியர்கள் முட்டாளாகவும் இருக்க கூடாது, தன்னிச்சையாக யோசிப்பவர்களாகவும் இருக்க கூடாது. ஆம் விஷயம் தெரிந்து இருக்க வேண்டும் ஆனால் அந்த விஷயம் மேலை நாட்டினரால் நாம் பெற்றது ஆகையால் அவர்கள் ஆணைக்கிணங்க தான் அதை நாம் அணுக வேண்டும் என்ற கல்வியையே லார்டு மெக்காலே விதைத்தான். இப்போது அந்நிய சக்திகள் இந்திய அரசையும் அவ்வாறே எதிர்பார்கிறது .. யாரோ போட்டி போடுங்க .. யாரோ பதவிக்கு வாங்க ஆனா உங்கள் இஷ்டப்படி இந்தியா இயங்கக் கூடாது. குறிப்பாக உலக அரங்கின் உன்னத நிலைகெல்லாம் பாரதத்தை இட்டு செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல கூடாது. இதை குலைக்க எங்களிடம் பல உபாயங்கள் உண்டு… எங்களது ச்லீபேர் செல்கள் மொழி வெறியர்களாய், பிரிவினை வாதிகளாய், போராட்டக்காரர்களாய், அமைதி வழி கருத்து உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள். be careful என்கின்றன..
.
பணமதிப்பிழப்பு, ஆர்டிகிள் 370, CAA, ராமர் கோவில் பிரச்சினை தீர்வு , ஆத்மநிர்பார், கொரோனா மருந்து இப்படி இந்தியாவின் சுய விஸ்வரூபம் இவர்களை அசைத்து பார்த்து விட்டது. CAA வழியாக தேசத்தில் காலூன்ற நினைத்த இவர்களின் எண்ணத்தில் கொரானா ரூபத்தில் இடி விழுந்தது. இப்போது அதை வேளாண் சட்டங்கள் வழியாக தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள்.
சட்டமே இயற்ற தெரியாத அரசாக இருந்தாலும் ஒரு ஷரத்து கூடவா சரியாக எழுதாமல் போய் விடும். 3 வேளாண் சட்டங்களிலும் ஒரு சட்டம் கூடவா விவசாயிக்கு அனுகூலமாக இல்லாமல் போய் விடும். அப்போ அதை எதிர்ப்பவர்கள் உண்மை விவசாயி ஆக இருந்தால் என்ன சொல்வார்கள் இது இது எங்களுக்கு ஒத்து வரவில்லை அதை மாற்றி சட்டம் இயற்றுங்கள் என்றுதான் சொல்வர். ஆனால் இவர்கள் கோரிக்கை என்ன? ஒட்டு மொத்த சட்டத்தையும் வாபஸ் வாங்கு என்பது. ஆண்மை உள்ள எந்த அரசும் இப்படி ஒரு கோரிக்கையை ஏற்காது.
.
ஆம் அதுதான் இவர்களுக்கு வேண்டும்… அதிக நாள் போராட்டங்கள் , அதி நவீன யுக்திகள் இப்படி அரசை திக்குமுக்காட செய்ய வேண்டும். அரசு இவர்கள் யார் என்று அறிந்து கொண்டு அடிபணிய வேண்டும். இதுதான் இவர்கள் நோக்கம்.
.
குடியரசு தினம் அன்று இவர்களின் வெறியாட்டம் இதை உறுதி படுத்தி விட்டது..
இது ஒரு திட்டமிட்ட சதி என்பது நிரூபிக்க பட்டு விட்டது. இதன் பின்னணி யோசித்தால் குலை நடுங்குகிறது.
.
ஒரு ஆபாச நடிகை – மியா காலிபா என்ற வெளி நாட்டு பெண்மணி இந்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதையும் இங்கு இருக்கும் போராட்டக் காரர்கள் ஆதரிக்கிறார்கள் … எவ்வளவு கேவலம்.
.
தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் இந்தியாவிற்கு எதிரான பரப்புரை க்கு தேர்ந்தெடுத்த பிரபலம்… க்ரீடா தன்பர்க் என்ற ஸ்வீடன் நாட்டு பதினெட்டு வயது சுற்று சூழல் போராளி.
அவர் ஒரு ட்வீட் மூலம் இந்த போராட்டம் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று உலகம் முழுவதும் குறிப்பு கொடுத்த விஷயம் லீக் ஆகி விட்டது.
இந்த போராட்டத்தை நடத்த ஒவ்வொரு மாதமும் திட்டம் இட படுகிறது என்ன என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் அறிவுரை வழங்கபடுகிறது . இந்த பெண் அனுப்பி உள்ள கடிதத்தில். ஜன 26 ஆன்லைன் மட்டுமல்ல நேரிலும் யார் யாரால் முடியுமோ அவர்கள் போராட்ட களத்தில் இறங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.
.
இந்த சுற்று சூழல் போராளி க்கு விவசாயிகள் நலனில் எல்லாம் பெரிய அக்கறை இல்லை .. அவர் சொல்கிறார் “ இந்தியாவில் மனித உரிமை மீறல், வன்முறை, மக்கள் மீது கொடூர வேற்றுமை போன்றவை வெகு நாட்களாக இருக்கிறது (இவளின் வயதே 18 – வெகு நாட்களாக என்றால் ?) “
தன் நாடு பற்றியே இன்னும் எதுவும் முழுவதும் அறிந்து கொள்ள முடியா இந்த சிறுவயதில் . இந்தியாவின் ஜனநாயகத்தை இந்த பெண் குறை சொல்கிறாள்.. மேலும் அனைவரையும் தூண்டி விடுகிறாள். எல்லோரும் ஜன 26 போராடுங்கள் , ட்விட்டர் யுத்தம் நடத்துங்கள்.. நீங்கள் கலந்து கொண்ட போட்டோ வீடியோ போடுங்க.அதற்கான கருவிகள் இவை என்று எந்த பெண்மணி போராட்டத்தை தூண்டுகிறார்.. அந்நிய நாட்டு பெண்மணிக்கு இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன.
.
ஒரு டிவி பேட்டியில் ஒரு இடது சாரி சொல்கிறார். கிரேட்டா வே சொல்லிவிட்டார், றிஹானா வே சொல்லி விட்டார். , மியா காலிபா வே சொல்லி விட்டார் விவசாயிகளுக்காக போராடுங்கள் என்று. பாருங்கள் இவர்கள் வாடகைக்கு எடுத்து இருப்பது யார் என்று . ஆபாச நடிகை, பாப் பாடகி, சுற்று சூழல் போராளி என்ற பெயரில் இருக்கும் அந்நிய பாரத நாட்டு எதிரி.
போராட்டத்தில் பல CAA போராளிகள்,… CAA போராட்டத்தில் பயன் படுத்திய அதே உத்தி பயன் படுத்தப் படுகிறது. ஆக போராட்டங்கள் சட்டங்களை எதிர்த்து அல்ல. இந்தியாவின் ஸ்திர தன்மையை எதிர்த்து.
இவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலங்கள் திட்டமிட்ட பரப்புரை செய்ய வாங்கும் பீஸ் எவ்வளவு என்றால் மயக்கமே போட்டு விழுந்து விடுவீர்கள் :
பிரபலங்களின் விலைப்பட்டியல்…(உறுதிபடுத்தப் படாத தகவல் )
ரிஹானா – $ 449,000
கைலி ஜென்னர் – $ 986,000
கிம் கார்டாஷியான் – $ 858,000
பியான்சே – $ 770,000
கார்டி பி – $ 366,000
நிக்கி – $ 625,000.
“இது எதற்கான விலை?” என்றால்…. சமுக வலைதளங்களில் ஒரு பதிவுக்கு இவர்கள் வாங்கும் விலை இது! கைலி ஜென்னர் ஒரு பதிவுக்கு (பரப்புரை / propoganda) பெறுவது $ 986,000 (ரூ 7,19,49,997.60) – ரூ 7 கோடி!
ரிஹானா என்ன பதிவு போடவேண்டும் என்று சி.என்.என் செய்தி லிங்கோடு கிரேட்டா டாக்குமெண்டில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டதை அப்படியே காப்பி – பேஸ்ட் செய்திருக்கிறாள் ரிஹானா. ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ இல்லை. வாங்கின காசுக்கு ஊழியம்!
‘இவர்கள் எப்படி பிரபலம் ஆகிறார்கள்?’ என்றால், தன்னை தானே ஆபாச டேப் எடுத்து வெளியிட்டு பிரபலமாக்கிக் கொள்வது. தங்களை பிரபலமாக்க ஏஜன்சிகளை உபயோகித்து ஊடகங்களுக்கு பணம் கொடுத்து இவர்களை பற்றி பேச வைப்பது.
இது நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இணைந்தே உழைப்போம். தேசம் காப்போம்..
ஒட்டு மொத்த மக்களும் நம் அரசோடு இருப்போம். அந்நிய சக்திகள் ஊடுருவ இடம் கொடோம்.
எம் ஜன்ம பூமி தாயே .. எம் கர்ம பூமி நீயே
எம் புண்ய பூமி தாயே .. குல தெய்வம் என்றும் நீயே
வாழ்வாம் மலர்தனை உன் திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவி தோறும் உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்..
.
ஜெய் ஹிந்த்
-G.சூரிய நாரயணன்