தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கலந்துகொண்ட மதுரை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூறிய பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை எப்போது தருவீர்கள், சமையல் சிலிண்டர் விலையை குறைப்பீர்களா, ரேஷனில் அரிசி நன்றாகவே இல்லை. தரமான அரிசி தருவீர்களா என பெண்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்டனர். அதற்கு பதில் சொல்லத்தெரியாமல் விழி பிதுங்கிய உதயநிதி, பார்ப்போம், இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். விரைவில் சரி செய்வோம் என கூறி சமாளித்து அங்கிருந்து கிளம்பினார்.