ரயில் சோதனை ஓட்டம்

மதுரை போடி இடையே 90.4 கி.மீ. துார மீட்டர் கேஜ் பாதையை அகற்றி அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் ரூ. 450 கோடியில், 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முடங்கிய இப்பணி, மீண்டும் துரிதப்படுத்தப்பட்டது. முதலில் மதுரை உசிலம்பட்டி இடையே பணி முடிந்தது. பின்னர் உசிலம்பட்டி ஆண்டிபட்டி’ இடையே பணி முடிந்து கடந்த டிசம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் எஞ்சிய ஆண்டிபட்டி தேனி இடையிலான 17 கி.மீ. துார அகல ரயில்பாதை, கேட்டு, சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அது முடிவடைந்த நிலையில் ரயில் இன்ஜினை 80 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் வரும் ஆகஸ்ட் 15க்குள் அதிகாரப்பூர்வ சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அகல ரயில் பாதையில் ரயில் இன்ஜின் வருவதைக் கண்ட மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.