இணைந்து பணியாற்ற வேண்டும்

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு (சி.எஸ்.ஐ.ஆர்) சங்கத்தின் கல்வி துணை குழுவிடம் உரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கல்வி, தொழில் துறைகள் இடையே நிலவும் நம்பிக்கை குறைபாட்டை களைய வேண்டும். அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும். சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தொழில்துறை இடையே வலுவான பிணைப்புகளை உருவாக்கப்பட வேண்டும். அறிவு உருவாக்கம், கண்டுபிடிப்புகள், புதுமைகளின் மூலம் நாட்டில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் தொழில்துறை, பல்கலைக் கழகங்கள், அரசுக்கு முக்கிய பங்குள்ளது. கல்வித் துறை, தொழில் துறை மற்றும் அரசு எவ்வாறு அவர்கள் இணைந்து பணியாற்றி புதுமை தொழில்முனைவுகளை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றலாம் என்பது குறித்து கல்வித் துறை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.