பாரதம் சுதந்திரம் அடைந்த ஆண்டுகூட தெரியாத மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, அங்கிருந்திருந்தால் நான் அவரை அறைந்திருப்பேன் என கூறினார். இதற்காக, சட்ட விதிகளை மீறி அவதூறு வழக்கில் அவரை கைது செய்தது மகாராஷ்டிர அரசு. சில மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், உத்தவ் தாக்கரே ஒருமுறை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக ‘அவர் யோகி அல்ல, போகி என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கூறினார். எனவே உத்தவ் தாக்கரே மீதும் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் தேவயானி ஃபாரண்டே கோரியுள்ளார். இது குறித்து காவல்துறை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.