திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு சென்று வருகின்றனர். இந்த நடைபாதையில் வெயிலிலிருந்து பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் ஆனதால், மேற்கூரை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அதை செப்பணிட்டு, சீரமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. அதற்கான பணிகள் ஓராண்டாக நடந்து வருகிறது. தற்போது கொரோனா காரணமாக குறைவான பக்தர்களின் வருகையை பயன்படுத்தி, இந்த பணியை இரண்டு மாதத்திற்குள் நிறைவு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம், நடைபாதை மார்கத்தில் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு மார்கமாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.