எஸ்.வி.பி.சி. அறிவிப்பு

உலகெங்கிலும் உள்ள திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு, தமிழ் ஆகியஇரு மொழிகளில்  வெங்கடேஸ்வரா பக்தி சேனல் எஸ்.வி.பி.சி எனும் பெயரில் ஆன்மிக செய்திகள், திருப்பதி தேவஸ்தான கோயில்களின் தரிசன விவரங்கள், விழாக்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த பக்தி சேனல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி முதல் கன்னடம்,ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் எச்.டி முறையில் அனைத்து மொழிகளிலும் சேனல்கள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.